நட்புறவு இணையதளங்களில் தகவல் பாதுகாப்பு இல்லை: கேம்ப்ரிட்ஜ் பல்கலை.

லண்டன்| Webdunia| Last Modified வியாழன், 23 ஜூலை 2009 (13:53 IST)
நட்புறவு இணையதளங்களுக்கு இடையே காணப்படும் கடும் தொழில் போட்டி காணப்பட்டாலும், பயனாளர்களின் தனிநபர் தகவல்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை என கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை நடத்தியவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், பிரபல நட்புறவு இணைய தளங்களான மைஸ்பேஸ் (MySpace), ஃபேஸ்புக் (Facebook) உட்பட பிரபலமடையாத நட்புறவு இணையதளங்கள் (social networking site) என மொத்தம் 45 சர்வதேச நட்புறவு இணையதளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதில் பயனாளர்களின் தனிநபர் தகவல்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படுவதில்லை என்றும, தனிநபர் தகவல்கள் தொடர்பான கொள்கைகள் மீறப்படுவதாகவும் குற்றம்சாற்றப்பட்டு உள்ளது.

உதாரணமாக 90% நட்புறவு இணையதளங்களில் இணைவதற்கு முழுப் பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்கள் தேவையின்றி பெறப்படுகின்றன. ஆனால் இவற்றில் 80% தகவல்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்ப்படுவதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :