த.தொ. நெறிஞர்களின் திறன் சரிவு : நாஸ்காம் எச்சரிக்கை!

Webdunia| Last Modified வெள்ளி, 6 ஜூலை 2007 (18:23 IST)
தகவல் தொழில்நுட்ப கல்வி பயின்று வெளிவரும் நெறிஞர்களின் திறன் சரிவு, தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகி வருகிறது என்று நாஸ்காம் எச்சரிக்கை விடுத்துள்ளது!

தேச மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமான நாஸ்காமின் தலைவர் கிரண் கார்னிக் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தகவல் தொழில்நுட்ப கல்வி அமைப்பில் போதுமான வளர்ச்சி ஏற்படாததே இந்த திறன் சரிவிற்கு காரணம் என்று கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு துறைக்கும் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாததே அத்துறையில் இருந்து படித்து வெளிவரும் மாணவர்கள் போதுமான திறன் பெறாததற்கு காரணம் என்றும், எனவே இது கற்பித்தல் அமைப்பில் உள்ள பிரச்சனை என்று கூறிய கிரண் கார்னிக், நாளுக்கு நாள் தகவல் தொழில்நுட்பம் படிக்க விரும்பும் மாணாக்கர்களின் எண்ணிக்கு அதிகரித்து வரும் நிலையில், கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்காதது எதிர்காலத்தில் பெரும் பிரச்சனையை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.
திறமையுடன் கூடிய தகுதி பெற்ற தகவல் தொழில்நுட்ப நெறிஞர்கள் உருவாக்கப்பட வேண்டுமெனில் கல்வி அமைப்பில் பெரும் சீர்திருத்தம் அவசியம் என்று கிரண் கார்னிக் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :