த.தொ.குற்றத் தீர்ப்பாயத் தலைவர் சென்னை வருகை

Webdunia| Last Modified வியாழன், 5 ஆகஸ்ட் 2010 (19:10 IST)
தகவல் தொழில்நுட்பக் குற்றத் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ராஜேஸ் டாண்டன் இன்று சென்னை வந்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான குற்றங்களின் தன்மை, எந்த அளவிற்கு அப்படிப்பட்ட குற்றங்கள் தொடர்பான புகார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ஆகியன குறித்து ஆராய சென்னை வந்த நீதிபதி ராஜேஷ் டாண்டன், தமிழக அரசுத் தலைமைச் செயலகத்திற்குச் சென்று அங்கு ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலர் பி.டபுள்யூ.சி.தாவிதர், தமிழக காவல்துறையின் த.தொ.குற்றங்கள் புலனாய்வுப் பிரிவின் காவல் தலைமை ஆய்வாளர் என்.மஞ்சுநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் த.தொ.தொடர்பான குற்றங்களின் தன்மைகள் குறித்து டாண்டனிடம் காவல் துறைத் தலைவரும் மற்ற அதிகாரிகளும் விளக்கினர்.


இதில் மேலும் படிக்கவும் :