தொலைக்காட்சி விளம்பரங்களை குறிவைக்கும் பேஸ்புக்

FILE

பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள். 1 பில்லியன் வாடிக்கையாளர்கள் இதற்கு உள்ளனர். இவர்களின் செய்திகளுக்கு மத்தியில் விளம்பரங்களை ஃபேஸ்புக் வெளியிடுகிறது. இவர்களின் எண்ணிக்கை தொலைக்காட்சி பார்வையாளர்களை விட அதிகம்.

எனினும், அமெரிக்காவில் தொலைக்காட்சி விளம்பரங்களுக்குதான் விளம்பரதாரர்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். 2013ஆம் ஆண்டில் அமெரிக்கத் தொலைக்காட்சிகளுக்கு 66 பில்லியன் டாலர்கள் வருமானம் கிடைத்தன. ஃபேஸ்புக் வலைத்தளத்திற்கு 7 பில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

அமெரிக்காவில் உள்ள மூத்தவர்களுக்கான அமைப்பான ஏ.ஏ.ஆர்.பி. தனது விளம்பரத்தில் தற்போது ஓய்வு பெறும் 45 வயதிற்கு மேலானவர்களுக்கான அமைப்பு என்று தங்களை பிரச்சாரம் செய்து கொள்கிறது. அமெரிக்காவில் ஓய்வு பெறும் வயது 45 என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, அமெரிக்க மரபுரிமை நிறுவனம் இள வயதினடையே புகை பிடிப்பது குறித்த விழிப்புணர்வை எழுப்புகிறது.

Webdunia|
பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், விளம்பரதாரர்களை குறிவைத்து இரண்டு விளம்பர பிரச்சாரங்களைத் துவக்கியுள்ளது.
தொலைக்காட்சி விளம்பரத்தை விட ஃபேஸ்புக் விளம்பரமே அதிகளவில் மக்களைச் சென்றடைவதாக ஏ.ஏ.ஆர்.பி. அமைப்பினர் நம்புகிறார்கள். இதன்படி, 45 வயது முதல் 64 வயது வரையிலான மக்களின் 14 சதவீதத்தினர் இதன் விளம்பரத்தைக் கண்டுள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :