தூத்துக்குடியில் கூகுள் தமிழ்.வெப்துனியா

webdunia photoWD

இன்று காலை ஸ்ரீ காமாட்சி வித்யாலயம் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளிக்கு கூகுள் பேருந்தும், தமிழ்.வெப்துனியா.காம் இணையக் குழுவும் சென்றன. இப்பள்ளியின் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த பள்ளிகளின் மாணாக்கர்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமான மாணாக்கர்கள் ஆர்வத்துடன் இணையத்தின் பயன்பாட்டையும், இணையத்தில் தமிழிலேயே கிடைக்கும் தகவல்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

மதியம் தூத்துக்குடியிலுள்ள செயிண்ட் மேரிஸ் மகளிர் கல்லூரிக்குச் சென்றது கூகுள் பேருந்து. 300க்கும் அதிகமான மாணவிகள் கூகுள் பேருந்திற்கும், தமிழ்.வெப்துனியா.காம் பந்தலிற்கும் விஜயம் செய்தனர்.

webdunia photoWD

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (23:20 IST)
தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டுள்ள கூகுள் பேருந்து இன்று இரண்டு பள்ளிகளுக்கும், ஒரு கல்லூரிக்கும் விஜயம் செய்து மாணாக்கர்களை சந்தித்தது.

இன்றுடன் தூத்துக்குடி பயணத்தை முடித்துக்கொள்ளும் கூகுள் பேருந்து நாளை புதுக்கோட்டையில் தனது இணையப் பயணத்தை தொடர்கிறது.இதில் மேலும் படிக்கவும் :