தகவல் தொழில்நுட்ப துறைக்கு இளைஞர்களை ஈர்க்க திட்டம்

Webdunia|
தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான கட்டமைப்பு வசதிகளையும் மனித வளத்தையும் மேற்கொள்ளவும், தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கு இளைஞர்களைத் தயார்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டம் நிதி நிலை அறிக்கை வகுக்கப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்கள் மூலமாக சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களாகிய திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, ஓசூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு 18.5 இலட்சம் சதுர அடி அலுவலக இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடவசதி முழுவதையும் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கிராமப்புற வணிகமுறை வெளிப்பணி மையங்களை ஊக்குவிக்க 2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 10 கோடி ரூபாடீநு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தரமான மனித ஆற்றலை வளர்ப்பதில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் பெரும் பங்கு வகிக்கிறது. வளரும் சமுதாயத்தில் காணப்படும் தொழில்நுட்ப இடைவெளி இத்திட்டத்தின் மூலம் நிரப்பப்படுவதை நமது மாநிலம் உறுதி செய்துவருகிறது. 2013-2014 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு 5.65 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும். 2013-2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 1,500 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :