தகவல் தொழில்நுட்பத் துறை 32 விழுக்காடு வளர்ச்சி!

Webdunia|
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாய் 50 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்று ஒரு ஆய்வறிக்கை கூறியுள்ளது!

2006-07 நிதியாண்டில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக 32 விழுக்காடு வளர்ந்துள்ளது.

இந்த நிதியாண்டில் மென்பொருட்கள் உள்ளிட்ட த.தொ. ஏற்றுமதி வருவாய் 35 விழுக்காடு அதிகரித்து ரூ.1,53,744 கோடியாக உயர்ந்துள்ளது.

உள்நாட்டு வருவாய் 27.2 விழுக்காடு உயர்ந்து ரூ.73,135 கோடியை எட்டியுள்ளது என்று டேட்டா குவெஸ்ட் ஆய்வறிக்கை கூறுகிறது.
ஏற்றுமதியில் ஐடெஸ் என்றழைக்கப்படும் த.தொ. சேவைகளின் பங்கு ரூ.1,03,647 கோடி, பி.பி.ஓ. என்றழைக்கப்படும் அயல் பணி சேவைகள் 33.5 விழுக்காடு வளர்ந்து ரூ.37,800 கோடியை எட்டியுள்ளன.

த.தொ. பொறியியல் சேவைகள் ரூ.4,146 கோடிக்கும், கேளிக்கை மற்றும் விளையாட்டு மென்பொருட்கள் ரூ.1,810 கோடிக்கும் ஏற்றுமதியாகியுள்ளன.
டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், விப்ரோ, சத்யம், ஹெச்.சி.எல்., காக்சிசண்ட், டெக் மஹிந்திரா, பாட்னி ஆகியன 8 த.தொ. முன்னணி நிறுவனங்களாக உள்ளன. இவைகளின் ஏற்றுமதி வருவாயில் 63 விழுக்காடு வட அமெரிக்காவில் இருந்தும், 29 விழுக்காடு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்தும், 5 விழுக்காடு ஆசிய-பசுபிக் நாடுகளிடம் இருந்தும் பெற்றுள்ளன.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கணினிகளில் 47 விழுக்காடு மைக்ரோச·ப்டின் விண்டோஸ் அமைப்பையே பயன்படுத்துகின்றன. லைனக்ஸ் 21 விழுக்காடு அளவிற்கு வளர்ந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :