தகவல் தொழில்நுட்பத்தை மாற்றப் போகின்ற 42 தொழில்நுட்பங்கள்!

Webdunia| Last Updated: திங்கள், 24 பிப்ரவரி 2014 (19:10 IST)
எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் போக்கையும், பயனீட்டையும் மாற்றக்கூடியவை 42 தொழில்நுட்பங்கள் என்றும், அவற்றில் 17 தொழில்நுட்பங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆக்செஞ்சர் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பால் டாகர்டி கூறியுள்ளார்!

தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்காலமும், தனி நபரின் சக்தியும் என்ற தலைப்பில் பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய பால் டாகர்டி, சேவையை மையமாகக் கொண்ட கட்டடக் கலை தொழில்நுட்பம், மெகா வெனர் பாக்கேஜ் சாஃப்ட்வேர், லெகஸி சாஃப்ட்வேர் ஆகியன அப்படிப்பட்ட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியனவாக இருக்கும் என்று கூறினார்.
ஐ.பி. நெட்வொர்க் கன்வெர்ஜன், செமன்டிக் டாட்டா இன்டக்ரேஷன், மல்டிகோர் பிராசசர், பயோ இன்ஃபர்மேட்டிக் மற்றும் சோஷியல் டெக்னாலஜிஸ் ஆகியவை உள்ளிட்ட 20 தொழில்நுட்பங்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏறபடுத்தும் என்றும், வீட்டு ரோபோக்கள், மல்டி பிளேயர் கேம்ஸ், கம்ப்யூட்டர் விஷூவலைசேஷன், விர்ச்சுவல் மற்றும் ஆக்மெண்டட் ரியாலிட்டி ஆகியவையும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று கூறினார்.
அனலைட்டிக்ஸ் அண்ட் பிசினஸ் இண்டலிஜென்ஸ், இண்டலிஜென்ட்ஸ் டிவைஸ் இண்டக்ரேஷன், ஹூயூமன் கம்ப்யூட்டர் இண்ட்ராக்ஷன் மற்றும் சிஸ்டம் இண்டக்ரேஷன் ஆகியன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் உன்னத இடத்தைப் பிடிக்கும் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :