டி.சி.எஸ். காலாண்டு லாபம் உயர்வு!

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (21:00 IST)
முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் 7 விழுக்காடு அதிகரித்து ரூ.1290.61 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலாண்டு முடிவில் நிகர லாபம் ரூ.1202.93 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 25% அதிகரித்து ரூ.6,530.34 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு முதல் காலாண்டில் மொத்தம் 12 புதிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளது டி.சி.எஸ். இதில் 3 ஒப்பந்தங்கள் 75 முத‌ல் 100 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் ஆகும்.
பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.3 இடைக்கால டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :