சைல்டு கேர் இணைய‌‌ம் விரிவாக்கம்

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:41 IST)
பள்ளி மற்றும் கல்வித்துறை நிறுவனங்களுக்கு ஆன்லைன் மூலம் சாப்ட்வேர் பயன்பாடுகளை வழங்கும் வகையில், சென்னையை சேர்ந்த சைல்டு கேர் ஆன்லைன் சர்வீஸ் நிறுவனம் ரூ.4 கோடியில் விரிவாக்கம் செய்துள்ளது.

அந்நிறுவன இந்திய செயல்பாட்டு இயக்குநர் சுவாமி வெங்கட் கூறுகையில், ‘‘கடந்த 2003ம் ஆண்டு சிறிய அளவில் 4 பேருடன் இந்த சேவை தொடங்கப்பட்டது. தற்போது ரூ.4 கோடி முதலீட்டில் 120 ஊழியர்கள் பணியாற்றும் வகையில் விரிவாக்கப்பட்டுள்ளது.

இத‌ன் மூல‌ம் ப‌ள்‌ளி ம‌ற்று‌ம் க‌ல்லூ‌ரிகளு‌க்கு‌த் தேவையான மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை, தேர்வு கட்டணம், வருகை பதிவேடு, ஊழியர்கள் பதிவு சேவைகளை வழங்க முடியும்’’ என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :