செல்போன் எண்களை 11 இலக்கமாக மாற்ற தொலைத் தொடர்புத்துறை முடிவு?

புதுடெல்லி| Webdunia| Last Modified சனி, 4 ஏப்ரல் 2009 (18:43 IST)
இந்தியாவில் செல்போன் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை விரைவாக உயர்ந்து வருவதால், தற்போது உள்ள 10 இலக்க எண்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, அனைத்து செல்போன் எண்களையும் 11 இலக்கமாக மாற்ற தொலைத் தொடர்புத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்து வருவதால் 10 இலக்க செல்போன் எண்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே புதிய வாடிக்கையாளர்களுக்கு செல்போன் எண் வழங்குவதில் விரைவில் சிக்கல் ஏற்படும் என பெயர் வெளியிட விரும்பாத தொலைத் தொடர்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதற்குத் தீர்வு காணும் விதமாக, 11 இலக்க செல்போன் எண்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என தொலைத் தொடர்புத்துறையின் தொழில்நுட்பப் பிரிவு சிபாரிசு செய்துள்ளதாகவும், இத்திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :