செல்போனில் முகம் பார்த்து பேசு‌ம் ‌தி‌ட்ட‌ம்

Webdunia| Last Modified திங்கள், 23 பிப்ரவரி 2009 (12:42 IST)
செல்போனில் எதிர்முனையில் பேசுபவரின் முகத்தை பார்த்தபடியே பேசவும், செல்போனில் அதிநவீன இன்டர்நெட் வசதியைப் பெற உதவும் 3ஜி என்று அழைக்கப்படும் புதிய சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் துவ‌க்கவிழா சென்னை அண்ணா சாலை தொலைபேசி நிலையத்தில் நேற்று நடந்தது.

இந்த புதிய திட்டத்தை, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி மரு‌த்துவமனை‌யி‌ல் இருந்தவாறே வீடியோ-கான்பரன்சிங் முறையில் தொடங்கி வைத்தார்.
அப்போது அவரும், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஏ.ராசாவும் செல்போனில் முகம் பார்த்தபடியே பேசினார்கள்.

அ‌ப்போது பே‌சிய கருணா‌நி‌தி, தகவல் தொழில்நுட்பத்தில் நவீன சேவையான செல்போனில் வீடியோ வசதி வழங்கும் `3ஜி' எனப்படும் மூன்றாம் தலைமுறை சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மூலம் தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சில வளர்ந்த நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, நடப்பில் உள்ள இந்த சேவை தற்போது முதன் முதலாக இந்தியாவிலும், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மூலம்- குறிப்பாக இந்தியாவிலேயே சென்னையிலே தொடங்கப்படுவது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது எ‌ன்றார‌்.


இதில் மேலும் படிக்கவும் :