செல்பேசிக்கு ஆங்கில-ஜப்பானிய மொழிபெயர்ப்பு மென்பொருள்

Webdunia|
முன்னணி தகவல் தொழில் நுட்ப மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான என்.இ.சி. கார்ப்பரேஷன் செல்பேசிகளுக்கென்றே தனிப்பட்ட முறையில் பயன்படக்கூடிய மொழிபெயர்ப்பு மென்பொருளை தயாரித்துள்ளது. அதாவது பிரயாணத்தின் போது பொதுவாக பயன்படுத்தும் சொற்களுக்கான விளக்கங்களை இது துரித கதியில் அளிக்கும்.

தற்போது ஜப்பானிய மொழி வார்த்தைகளுக்கு ஆங்கில விளக்கமும், ஆங்கில வார்த்தைகளுக்கு ஜப்பானிய மொழி விளக்கமும் தானாக்வே செல்பேசியில் தெரியுமாறு இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள் எவ்வாறு வேலை செய்கிறது என்பது தற்போது என்.இ.சி.யின் செல்பேசிகளில் பொதிக்கப்பட்டு அதன் செயல் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் மூலம் வார்த்தைகளுக்கு விளக்கம் தெரிந்து கொள்ள எந்த ஒரு நெட்வொர்க் இணைப்புகளோ, வெளி சர்வர்களோ தேவையில்லை. இது சிறிய செல்பேசிகளுக்கென்றே தனித்துவமாக உருவாக்கப்பட்ட மென்பொருள் என்பதால் நெட்வொர்க், சர்வர் தேவைகள் இல்லை.

ஒரு வார்த்தை அல்லது வாக்கியம் ஆகியவற்றிற்கு விளக்கத்தை காண்பிக்க இந்த மென்பொருள் சிறிய நேரமே எடுத்துக் கொள்கிறது.
இந்த புதிய மென்பொருளுக்கு அதன் அடிப்படையை வழங்கியது குரல் கண்டுபிடிப்பு எந்திரம் மற்றும் ஒரு வார்த்தை விதி அடிப்படையிலான மொழிபெயர்ப்பு கருவி ஆகியவையே என்று என்.இ.சி. தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

எவ்வளவு சப்தம் நிறைந்த சூழலிலும் குரல்களை அடையாளம் காணும் தொழில் நுட்பத்தை இப்போது என்.இ.சி. இந்த மென்பொருள் மூலம் மேம்படுத்தியுள்ளது.
மேலும் விளக்கம் பெறுவதற்கான வார்த்தைஅகள் மற்றும் வாக்கியங்கள் எண்ணிக்கைகளை தங்களது தரவுப் பெட்டகத்தில் அதிகரித்திருப்பதாக என்.இ.சி. செய்திக் குறிப்பு கூறுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :