சாம்சங் கேலக்ஸி பீம்: ஸ்மார்ட் ஃபோன் போன்று ஜொலிக்குமா?

Webdunia|
WD
இந்த மதிப்புரையை நீங்கள் படிக்கவேண்டியதற்கான ஒரு காரணம் என்னவெனில் சாம்சங் கேலக்சி பீம் கொண்டுள்ள பிகோ புரொஜெக்டர் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம்தானே!

உயர்தொழில்நுட்ப பயன்பாட்டு காம்பேக்ட் டிஜிட்டல் கேமாராக்களில் மட்டுமே புரோஜெக்டர்கள் இருக்கும் நிலையில் கேலக்சி பீம்தான் முதல் முதலாக தன்னுள்ளே இத்தகைய பிகோ-புரொஜெக்டரைக் கொண்டுள்ளது. 15 லூமென் ஒளியில் ஜொலிக்கும் சாம்சங் கேலக்ஸி பீம் 640x360 ரிசொல்யூஷன் கொண்டது. உடனடியான அபார காட்சி அனுபவத்தை இது உங்களுக்கு 50" வரை பெரிதாக்கும் வசதியுடையது. மேலும் கேலக்சி பீம் ஏன் இவ்வளவு ஒரு மந்திரம் போன்ற தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனில் அதன் 2000mAh பேட்டரி. இது சாம்சங் SIII-யில் உள்ளதைப்போன்றது.
ஸ்மார்‌ட்போன்களை வடிவமைப்பதில் சாம்சங் ஏற்கனவே கைத்திறன் பெற்றுள்ள நிலையில் இந்த ஃபோன் மூலம் சந்தையில் அதன் மதிப்பு உயரும் என்பது உறுதி. காரணம் பிகோ புரொஜெக்டரை இதில் பொதித்துள்ளது மூலம் இன்னொரு மைல்கல்லை எட்டியுள்ளது சாம்சங். மேலும் இது மையமான அம்சங்களில் சமரசம் செய்துகொள்வதில்லை. அதாவது உயர் தர மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்பத்தை இது நம்பியிருக்கிறது.
வடிவமைப்பு:

இது அதன் பெயருக்குத் தகுந்தாற்போல் நிற்கும் என்பது உண்மை. ஜொலிக்கும் இந்த ஃபோனின் கவர்ச்சிகரமான மஞ்சள் பக்கவாட்டு நிறம் இளைஞர்களின் விருப்பமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

மிகவும் சக்திவாய்ந்த பேட்டரி பவர் பற்றி உங்களுக்கு உற்சாகம் ஏற்பட்டாலும் சற்றே கனம் கூடுதலாக இருப்பதை நீங்கள் மறந்து விட முடியாது. ஆனாலும் சாம்சங் இதனை ஒத்துக் கொள்வதில்லை, உலகிலேயே இதுதான் மிகவும் லேசான ஃபோன் என்று கோருகிறது. இந்த ஃபோனின் பரிமாணம் 4.9 இன்ச் உயரம், 2.5 இன்ச் அகலம், 0.5 இன்ச் அடர்த்தி.
AMOLED LCD திரையுடன் 480x400 பிக்செல் ரிசொல்யூஷன் கொண்டது. நிறம் ஒளிமயமாக இருப்பதால் மிகச்சிறந்த காட்சி அனுபவம் உறுதி. சூரிய ஒளியிலினால் காட்சி தெரியாமல் போய் விடுமோ என்ற அச்சம் தேவையில்லை. ஏனெனில் இதில் எதிர் பிரதிபலிப்புத் திரை உள்ளது இதனால் உச்சிவெயிலிலும் நன்றாக‌த் தெரியும்.
இன்டர்ஃபேஸ் மற்றும் செயல்பாடு:

ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர்பிரெட் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் டச்விஸ் இன்டர்ஃபேஸ் கொண்டது. இதனால் நீங்கள் எதிர்பார்க்கும் உலாவித்திறன் கிடைக்கும். கூகுள் சேவைகளான யூ டியூப் மற்றும் பிற சேவைகளை தங்கு தடையின்றி இதில் காணலாம். மரபான கீபோர்ட் தவிர Swpe என்ற வர்ச்சுவல் விசைப்பலகையும் உள்ளது. இதுதவிர ஆல்ஷேர், கீஸ் ஏர், சாட் ஆன், இன்னபிற... அம்சங்களுக்குக் குறைவில்லை. குரல் கட்டளைச் சேவைகளில் கூகுள் ஆன்ட்ராய்ட் வாய்ஸ் ஆக்சன்ஸ் மற்றும் விலிங்கோ, ஆகியவையும் இந்த ஸ்மார்ட்ஃபோனில் உள்ளது.
கேமரா:

பின்பக்கம் நோக்கி இருக்கும் 5மெகாபிக்செல் கேமரா நீங்கள் கிளிக் செய்யவும், ஷூட் செய்யவும் உதவுகிறது போட்டோக்கள் தெளிவாகவும் டுல்லியமாகவும் இருக்கும். வீடியோவைப் பொறுத்தமட்டில் HD 720 பிக்செல் பதிவு மட்டுமே செய்கிறது என்பது 1080 பிக்செல் பதிவு செய்யும் என்று எதிர்பார்ப்பவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையே. இந்த கேமரா உள்ளே பிடிக்கப்படும் படங்களை விட வெளியே எடுக்கும் படங்களுக்கே ஏதுவாக உள்ளது. ஆனால் இதன் இன்னொரு அம்சம் குறிப்பிடத்தகுந்தது. அதாவது LED Flash உடன் இது வருவதாகும். இதைத்தவிர சாம்சங் வழங்கும் ஆன்ட்ராய்ட் கேமரா அம்சங்களான ‌ஸ்மைல் ஷாட், பனோரமா, மற்றும் ஆக்சன் ஷாட்ஸ் ஆகியவையும் உண்டு.
சாம்சங் கேலக்ஸி பீம் வழக்கமான ஒரு ஸ்மார்ட் ஃபோன் போலவே தெரிந்தாலும், உள்ளமைக்கப்பட்ட புரொஜெக்டர் என்பது இதனை எளிதாக மற்ற ஃபோன்களிடமிருந்து உயர்த்திவிடுகிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் கையில் ஓரிரு திரைப்படங்களை கண்டு மகிழலாம்.

ஒட்டுமொத்தமாக இதன் செயல்திறன் திருப்திகரமாக உள்ளது. வடிவமைப்பு தூக்கலாக இருக்கிறது.
இந்த ஸ்மார்ட் ஃபோன் [email protected] Reliance Digital மதிப்பீடு செய்துள்ளது. சமீபத்திய மாடல்களுக்கு ரிலையன்ஸ் டிஜிட்டலை அணுகவும். இது அனைத்து விதமான தொழில்நுட்ப நுகர்வுப் பொருட்களு‌க்கான ஒரே விற்பனை மையமாகும். டுவிட்டர், ஃபேஸ்பு‌க் ஆகியவற்றில் உள்ள எங்கள் நிபுணர்களுடன் தொடர்பிலிருக்கவும். மேலும் விவரங்களுக்கு ரிலையன்ஸ் டிஜிட்ட‌‌ல் இணையதளத்திற்கு வருகை தரவும்.
இருப்பினும் திரையின் மூலம் மக்களைக் கவரும் அதன் அம்சத்தை தவிர சாம்சங் தனது ஃபோனை அசாதாரண ஒன்றாக கொண்டு வரமுடியவில்லை. இது காலக்ஸி எஸ் அட்வான்ஸ் ரக ஃபோனையே நினைவூட்டுவதாக உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :