சாம்சங்கின் புதிய வெளியீடு எஸ் 5312 கேலக்ஸி நியோ!

Webdunia|
FILE
இந்திய மொபைல் விற்பனைச் சந்தையில் முதல் இடத்தைப் பிடித்துள்ள சாம்சங் நிறுவனம், வாடிக்கையாளர்களின் ரசனைகள் மற்றும் விலை எதிர்பார்ப்புகளுக்கேற்ப, மொபைல் போன்களைத் வடிவமைத்து வழங்கி வருகிறது. அந்த வகையில், அண்மையில் வந்துள்ள மொபைல் எஸ் 5312 கேலக்ஸி நியோ.

4 பேண்ட் அலைவரிசைகளில், இரண்டு சிம் இயக்கத்தில் இது இயங்குகிறது. 3 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், மல்ட்டி டச் வசதியுடன் தரப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 104.95 X 57.8 X 11.8 மிமீ. எடை 100.5 கிராம். பார் டைப் வடிவில், கிரே, வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் இது கிடைக்கிறது.

லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 512 எம்.பி. ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, இதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளன. எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. வை-பி, புளுடூத், யு.எஸ்.பி., வசதிகள் உள்ளன.
FILE

2 எம்.பி. திறனுடன் ஒரே ஒரு கேமரா தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசஸர் 850 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. பதியும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் மற்றும் டாகுமெண்ட் வியுவர் வசதி கிடைக்கிறது. ஆர்கனைசர், இமேஜ் வீடியோ எடிட்டர் தரப்பட்டுள்ளன.
கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யு-ட்யூப், காலண்டர், கூகுள் டாக் மற்றும் பிகாஸா ஆகியவற்றுக்கான நேரடி தொடர்புகள் கிடைக்கின்றன. இதன் பேட்டரி 1,200 mAh திறன் கொண்டதாக உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 300 மணி நேரம் மின் சக்தி தக்க வைக்கப்படுகிறது. தொடர்ந்து 6 மணி நேரம் இதன் மூலம் பேசலாம்.

இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.7,149 என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :