சமையல் செய்யும் ரோபோ

Webdunia| Last Updated: புதன், 19 பிப்ரவரி 2014 (01:19 IST)
எந்த வித பரபரப்பும் இன்றி அருமையான சமையல் செய்யும் இயந்திர மனிதனை (ரோபோ) ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

பெய்ஜிங்கைச் சேர்ந்த லு சாங்ஃபா என்பவர் உருவாக்கியுள்ள இந்த இயந்திர மனிதன், அருமையான சமையலை ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்துவிடுகிறது.

கணினி் இணைக்கப்பட்ட இந்த இயந்திர மனிதன், காய்கறிகள், மாமிசங்களைக் கொண்டு எந்த பரபரப்பும் இன்றி ஒரு சில நிமிடங்களில் எனக்குப் பிடித்தமான உணவை தயாரித்துக் கொடுத்து விடுகிறது என்று சாங்ஃபா கூறியுள்ளார்.
சாங்பிங் மாவட்டத்தில் உள்ள சுமார் 200 பேர், இந்த இயந்திர மனிதன் தயாரித்த உணவை ருசி பார்த்துள்ளனர்.

அதில் ஒருவர் கூறுகிறார், இயந்திர மனிதன் தயாரித்த உணவு, நன்கு தேறிய சமையல்காரர் செய்த உணவிற்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை என்று.

இயந்திர மனிதன் சமைக்கும் எல்லா உணவு வகைகளும் அருமையாகவும், அதிக சுவையுடனும் இருக்கின்றன என்று மற்றொருவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :