கொரிய செல்பேசிகள் வேண்டாம்

Webdunia|
விலை குறைவாகவும், அதே சமயம் அதிக வசதிகளுடனும் இருக்கிறது என்று கொரியன் அல்லது சீன செல்பேசிகளை வாங்க வேண்டாம்.

ஏன் என்றால், ஏற்கனவே இருக்கும் கொரியன் மற்றும் சீன செல்பேசிகளின் இணைப்புகள் வரும் ஜனவரி 6ஆம் தேதியுடன் துண்டிக்கப்பட உள்ளன.

அன்றைய தினம் இதுபோன்ற 2.5 கோடி செல்போன்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைப்பை துண்டிக்கப் போகின்றன.

இதற்குக் காரணமும் உண்டு...
முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகளில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்பேசி கருவி அடையாள எண்) எண் இருக்கும். ஆனால் இந்த கொரியன் செல்பேசிகளில் இந்த எண் இருக்காது.

இந்த ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத கொரிய செல்பேசிகளை ஒருவர் பயன்படுத்தினார் என்பதை நிரூபிக்க முடியாது. மேலும், இந்த செல்பேசியைப் பயன்படுத்தி தீவிரவாதிகளும், குற்றவாளிகளும் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே நாட்டின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு, ஐ.ம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்தே, ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளுக்கு சேவையை துண்டிக்குமாறு செல்பேசி நிறுவனங்களை தொலைத் தொடர்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதையடுத்து இந்த நடவடிக்கை ஜனவரி 6ஆம் தேதி அமலாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :