கேள்வியும் நீங்களே, பதிலும் நீங்களே!

Webdunia|
வெப்துனியா.காம், தனது வாசகர்களுக்காக "வெப்துனியா ‌க்வெஸ்ட்" என்ற சிறப்பான சேவையை அறிமுகப்படுத்துகிறது.

வெப்துனியா க்வெஸ்ட் சேவையில் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும், பல காலமாக உங்கள் மனதில் இருந்த கேள்விகளை எ‌ல்லா‌மகேட்கலாம்.

அதுமட்டுமல்ல, மற்றவர்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரிந்திருந்தால் அதற்கான பதிலையு‌ம் அளிக்கலாம்.
கேள்விகளை கேட்பதற்கு வசதியாக இணையம், எலக்ட்ரானிக், மக‌ளி‌ர், அரசியல், சமூகம், அறிவியல், ஆன்மிகம், பொழுதுபோக்கு, தொழில், விளையாட்டு, வன்பொருள் என பல்வேறு வகைகளாக பிரித்து வைத்துள்ளோம்.

எனவே இதில் உங்களுக்குத் தேவையான பிரிவை தேர்ந்தெடுத்து அதில் உங்களது கேள்விகளைக் கேட்கவும் முடியும், உங்களது பதிலை அளிக்கவும் இயலும்.
வெப்துனியா ‌க்வெஸ்ட் பக்கத்திற்கு சென்றதும், உங்களது மொழியை தேர்வு செ‌ய்தகொ‌ள்ளவு‌ம்.

கேள்வி கேட்க வேண்டுமானால் முக‌ப்பப‌க்க‌த்‌திலேயே "கேள்வி கேளுங்கள்" என்று வலது புறத்தின் மேற்பகுதியில் இருப்பதை கிளிக் செய்யவும். பின்னர் உங்களது கேள்விகளையும், அதைப் பற்றிய விவரங்களையும் கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் நிரப்பி பதிவு செய்யவும்.
மேலு‌மஏற்கனவே வெ‌ப்து‌னியவாசக‌ர்க‌ளகே‌ட்டிரு‌க்கு‌ம் கேள்விக்கு பதில் தெரிந்தால் அதற்குண்டான பதிலை கேள்விக்குக் கீழே ப‌திலை அ‌ளி‌க்க என்பதை பயன்படுத்தி உங்கள் பதிலை அளிக்கலாம்.

இதற்கு உங்களது வெப்துனியா மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம். அவ்வாறு இல்லாதவர்கள் புதிய மின்னஞ்சலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
வெப்துனியா ‌க்வெஸ்ட் பக்கத்திற்குச் செல்ல!


இதில் மேலும் படிக்கவும் :