கேலக்ஸி நோட் 3 மற்றும் கியர் ஸ்மார்ட் வாட்ச்-ஐ வெளியிட்டது சாம்சங்

Webdunia|
FILE
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் தொடங்கியுள்ள சர்வதேச நுகர்வோர் பொருட்கள் கண்காட்சியில் மற்றும் கியர் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பெர்லினில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி சர்வதேச நுகர்வோர் பொருட்கள் கண்காட்சி நடப்பது வழக்கம். இதன்படி, ஐஎப்ஏ - 2013 கண்காட்சி நேற்று தொடங்கியது.

இந்த கண்காட்சியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் - 3 செல்போனையும், கியர் ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகம் செய்தது. இவை இரண்டிலும் பல்வேறு புதிய வசதிகளை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி நோட் - 3ல் பெரிய ஸ்கிரீன், எஸ் பென் வசதிகள் உள்ளன. இது தவிர ஒரே நேரத்தில் செயல்படக்கூடிய பல்வேறு வசதிகளும் உள்ளன என்று சாம்சங் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :