கும்பகோணத்தில் கூகுள் பேருந்து

webdunia photoWD

தஞ்சையில் உள்ள இதயா மகளிர் கல்லூரியில் இன்று காலை வந்த கூகுள் பேருந்திற்கு அக்கல்லூரி மாணவிகள் வருகை தந்து இணையத்தின் பயன்பாட்டை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

கூகுள் பேருந்திலிருந்து தமிழ்.வெப்துனியா பந்தலிற்கு வந்த மாணவிகளிடம் எமது இணையத் தளத்தின் துணை ஆசிரியர்கள் முத்துக் குமார், சித்தார்த்தன் ஆகியோர் தமிழ் மொழியின் வாயிலாக இணையத்தின் பயன்பாட்டை முழுவதுமாக பெறுவதன் சிறப்பை விளக்கினர்.

webdunia photoWD

1,200 மாணவிகள் கூகுள் பேருந்திற்கு விஜயம் செய்தனர். தற்பொழுது கும்பகோணத்திலுள்ள புகழ்பெற்ற மகாமக குளத்திற்கு அருகே பொது மக்களின் பார்வைக்காக நின்றுக் கொண்டிருக்கிறது. அதனருகில் தமிழ்.வெப்துனியா பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.

Webdunia|
திருச்சி, தஞ்சை நகரங்களில் கடந்த சில நாட்களாக உலா வந்து மாணாக்கர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய கூகுள் பேருந்து இன்று கும்பகோணம் வந்தது. கூகுளுடன் தமிழ்.வெப்துனியா.காம் குழுவும் இணைந்துகொண்டது.

நாளை நெய்வேலிக்கு வருகிறது கூகுள் பேருந்து, உடன் தமிழ்.வெப்துனியாவும்.இதில் மேலும் படிக்கவும் :