கிராமங்களில் சோனி பிராவியா TV இனி குறைந்த விலையில்!

Webdunia|
FILE
உயர் தொழில்நுட்பத்தைக் கொண்ட சோனி நிறுவனத்தின் பிராவியா ரக தொலைக்காட்சிகளை கிராமப்புறங்களில் குறைந்த விலையில் விற்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் சோனி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெனிசிரோ ஹிபி, இரண்டு உயர் ரக 4-கே தொழில்நுட்பத்துடன் கூடிய சோனி பிராவியா தொலைக்காட்சிகளை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்து பேசுகையில், இந்தியாவின் பெருநகரங்களில் அதிக விலையுள்ள உயர் ரக சோனி டிவி மாடல்களை விற்பனை செய்துவருகிறோம். ஆனால் இரண்டாம் நிலையில் உள்ள நகரங்களிலும் சிறு ஊர்களிலும் மிக அதிக விலையுள்ள டிவிகள் விற்கவில்லை.
FILE

இந்தியாவில் விற்பனையாகும் மொத்த சோனி டிவிகளில் 35 சதவீதம் பிராவியா மாடல்களாகும். இந்நிலையில், உயர் தொழில்நுட்பத்தில் உருவான பிராவியா டிவிகளை குறைந்த விலையில் விற்கத் திட்டமிட்டிருக்கிறோம். இதன் விலை ரூ.15 ஆயிரத்திலிருந்து தொடங்கும்.
FILE
இவற்றை மேலும் அதிக எண்ணிக்கையில் விற்க வேண்டுமானால் இந்திய கிராமப்புறங்களைத்தான் நம்ப வேண்டும். எனவே சோனி பிராவியா டிவிகளை கிராமப்புறங்களில் விற்க புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

அனைத்து பிராவியா டிவிகளும் மலேசியாவில் தயாராகி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட ஒரு உயர் ரக 4-கே தொழில்நுட்ப டிவி-யின் விலை ரூ.3.04 லட்சம். மற்றொரு மாடலின் விலை ரூ.4.04 லட்சமாகும்.
கடந்த நிதி ஆண்டு 11 லட்சம் டிவிகளை சோனி இந்தியா நிறுவனம் விற்பனை செய்தது. நடப்பு நிதி ஆண்டில் 13 லட்சம் டிவிகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கெனிசிரோ ஹிபி தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :