கலக்க வருகிறது எம்.ஜி.எம். சானல்!

Webdunia|
மும்பை: ஹாலிவுட் திரைப்படங்களின் பொக்கிஷம் என்று கருதப்படும் எம்.ஜி.எம். சானல் விரைவில் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் மூலம் இந்திய ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ள வருகிறது.

இந்திய கேபிள் தொலைக்காட்சி சந்தையில் எம்.ஜி.எம். தொலைக்காட்சி சானலை பரவலாக்கிட, வினியோகம் செய்ய ஸ்டார் டென் (STAR DEN) மீடிய சர்வீசஸ் நிறுவனத்துடன் எம்.ஜி.எம் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதுவரை டி.டி.எச் நிறுவனமான டிஷ் டிவி-யில் மட்டுமே எம்.ஜி.எம். சானலை பார்க்க முடிந்தது. தற்போது மற்ற கேபிள் தொலைக்காட்சி வினியோகங்களிலும் எம்.ஜி.எம். சானல் கிடைக்கவுள்ளது.
உலகின் 3-வது பெரிய தொலைக்காட்சி சந்தையான இந்தியாவில் தங்களது சானலை வினியோகம் செய்ய மெட்ரோ- கோல்ட்வின் - மேயர் (MGM) நிறுவனம் ருபெர்ட் முர்டாக்கின் நியூஸ் நெட்வொர்க்கின் ஸ்டார் டென் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி 70 மில்லியன் வீடுகளுக்கு எம்.ஜி.எம். தொலைக்காட்சி சானலை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஸ்டார் டென் நிறுவனத்தினுடையது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய சந்தையில் புதிய டி.டி.எச். தொலைக்காட்சி சானல் வினியோக நெட்வொர்க் மற்றும் வளர்ந்து வரும் இன்டெர் நெட் டிவி ஆகியவற்றிலும் எம்.ஜி.எம். சானல் தற்போது நுழைய முடியும்.

எம்.ஜி.எம். சானல், மிகப்பெரிய அளவில் ஹாலிவுட் திரைப்படங்களை மக்களுக்கு காண்பிக்க தங்கள் கைவசம் வைத்துள்ளது. அதாவது 4000 ஹாலிவுட் திரைப்படங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய திரைப்பட லைப்ரரி என்று எம்.ஜி.எம். கொண்டாடப்படுகிறது.
24 மணி நேர சானலான இதில் வரும் காலங்களில் உடி ஆலன் உட்பட பல தரமான திரைப்படங்கள் காண்பிக்கப்படவுள்ளதாக, எம்.ஜி.எம். சானலின் குர்ஜீவ் சிங் கபூர் இந்த அறிமுக விழாவில் பேசும்போது கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :