கடலூரில் கூகுள் தமிழ்.வெப்துனியா

webdunia photoWD


அதன்பிறகு தமிழ்.வெப்துனியா.காம் பந்தலி்ற்கு வந்த மாணவர்களுக்கு எமது தளத்தின் துணை ஆசிரியர்கள் முத்துக்குமார், சித்தார்த்தன் ஆகியோர், தமிழ் மொழியிலேயே இணையத்தை பயன்படுத்திப் பெறும் பலன்களை விளக்கினர். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

அதன்பிறகு கடலூரில் உள்ள சில்வர் பீச் கடற்கரைக்கு கூகுள் பேருந்து சென்றது. அங்கு பொது மக்கள் ஆர்வத்துடன் இணையத்தைப் பற்றிக் கேட்டறிந்தனர்.

இன்று காலை அண்ணா விளையாட்டு அரங்கு அருகே கூகுள் பேருந்து பொது மக்களுக்கு இணையத்தின் பயன்பாட்டை விளக்கியது. இங்கும் மக்கள் ஆர்வத்துடன் இணையத்தைப் பற்றி கேட்டறிந்தனர்.

webdunia photoWD


Webdunia|
கும்பகோணம், நெய்வேலி நகரங்களை வலம் வந்த கூகுள் இணையதளப் பேருந்து நேற்றும் இன்றும் கடலூரில் பயணித்து மாணவர்களையும், பொது மக்களையும் சந்தித்து வருகிறது.
வியாழக் கிழமை காலை கடலூரில் உள்ள காமாட்சி சண்முகம் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்குச் சென்றது. அங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கூகுள் பேருந்திற்கு விஜயம் செய்தனர். இணையத்தின் பயன்பாட்டை கூகுள் குழுவினர் மாணாக்கர்களுக்கு விளக்கினர்.

கூகுள் பேருந்து நாளை திருவண்ணாமலை செல்கிறது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் பொது இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளது. கூகுள் பேருந்துடன் தமிழ்.வெப்துனியாவும் இணைந்து மாணாக்கர்களைச் சந்திக்கிறது.இதில் மேலும் படிக்கவும் :