ஒருங்குறியில் கிரந்தமா? நாளை கருத்தரங்கம்

Webdunia| Last Modified வெள்ளி, 3 டிசம்பர் 2010 (20:05 IST)
கணினித் தமிழ் எழுத்துருவை ஒருங்குறியில் (யுனிகோட்) உருவாக்குவதில் கிரந்த எழுத்துக்களை சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை தெளிவாக வலியுறுத்தும் கருத்தரங்கம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.

‘தமிழ்க்காப்பு அரங்கம்’ என்ற பெயரில் சென்னை, எழும்பூரிலுள்ள கன்னிமாரா பொது நூலகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் காலை 9.30 மணி முதல் மாலை வரை நடைபெற்வுள்ளது.

இவ்வரங்கத்திற்கு முனைவர் தெய்வசுந்தரம் தலைமை தாங்குகிறார். மு.பொன்னவைக்கோ தொடக்கவுரையாற்றுகிறார். முனைவர்கள் மு.தெய்வநாயகம், ந.அருள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
கணித்தமிழ் சங்கத் தலைவர் ஆண்டோ பீட்டர் தலைமையில் முதல் அமர்வு நடைபெறுகிறது. இதில் பாவாணர் தனித்தமிழ்ப் பயிற்றகத்தின் த.தமிழ்த்தென்றல் அறிமுகவுரையாற்றுகிறார்.

முனைவர் இராமகி, பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி, பொறிஞர் ப.செல்லப்பன், முனைவர் சின்னத்துரை சீனிவாசு (இங்கிலாந்து) ஆகியோர் ஒருங்குறியில் கிரந்தம் குறித்துப் பேசுகின்றனர்.
இறுதி அமர்வில் இலக்குவனார் திருவள்ளுவன் தீர்மான உரையும், முனைவர் ப.அர.நக்கீரன் சிறப்புரையும் ஆற்றுகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :