ஐடியா ஸ்மார்ட்போன் 3G அறிமுகம்!

Webdunia|
FILE
ஐடியா மொபைல்ஸ் நிறுவனம் புதிய ஐவொரி ஸ்மார்ட்போன் 3G டியூவல் சிம் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்கிரீம் சான்விட்ச் ஓஸ் மற்றும் 1GHz பிராசஸர் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் அனைவரும் வாங்கக்கூடிய விலையான ரூ.7,390 மட்டுமே.

இந்த ஐடியா ஐவொரியில் 1GHz பிராசஸர், 4GB இன்டெர்னல் மெமரி மற்றும் 512 MB RAM வசதி கொண்டது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு பக்கபலமாக உறுதியான பேட்டரி, ஆன்ட்ராய்டு பிரவுசர், G சென்சார், Wi-Fi, A-GPS, இத்துடன் சமூக வலைத்தளங்களான ஆன்ட்ராய்டு GMS ஸ்டான்டாடு அப்பிளிகேசன், பேஸ்புக், டிவிட்டர், ஐமேப், HTML, மியூசிக் வீடியோ பிளேயர் உள்ளிட்ட பல வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஐடியா ஐவொரி ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :