ஏ.சி.இ. விருதிற்கு மைக்ரோசாஃப்ட் இந்தியா தேர்வு!

Webdunia|
வாஷிங்டன்: கார்ப்பரேட் பணித்திறனுக்கான ஏ.சி.இ. 2008 விருதிற்கு மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மதிப்பு மிக்கதாய் கருதப்படும் இந்த விருதிற்கான நிறுவனத் தேர்வுகளை உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் தேர்வு செய்து அனுப்பியுள்ளனர்.

அதில் இறுதிப்பட்டியலில் 11 நிறுவனங்கள் தேர்வாகியுள்ளன. இதில் மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனம் தேர்வடைந்துள்ளது.

அதாவது உலகெங்கிலும் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் ஒரு நல்ல கார்ப்பரேட் குடிமகன்களாக பணித்திறனுடன் செயல்பட்டு வருவதை அங்கீகரிக்கும் விருது இது என்று அமெரிக்க அரசுத்துறை தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தர நிலைகளின் அடிப்படையில் மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனம் ஏ.சி.இ. 2008 விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :