உலகின் மிக மெல்லிய தடிமன் கொண்ட மொபைல் போன்

FILE

ஜியானி இ லைப் எஸ் 5.5 (Gionee Elife S 5.5) என அழைக்கப்படும் இந்த மொபைல் போன், சென்ற பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சீன நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும். சீனாவில் சென்ற பிப்ரவரியில் 3ஜி போனாக இது அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த நாட்டில் குறிக்கப்பட்டுள்ள விலையின் படி பார்த்தால், இதன் இந்திய மதிப்பு ரூ.22,500 ஆக இருக்கும். ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வரும் போதுதான் இதன் விலை தெரியவரும். மார்ச் 30 மற்றும் 31 அன்று, கோவா மாநிலத்தில் இதன் இந்திய அறிமுகம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதுவரை மிக மெல்லிய தடிமன் கொண்ட போனின் அளவு 7.6 மிமீ ஆகும். இது ஐபோன் 5எஸ் ஆகும். இதனுடன் ஒப்பிட்டு வர இருக்கும் ஜியானி இ லைப் போன் 5.5 மிமீ உடன் எப்படி இருக்கும் என எண்ணிப் பார்க்கலாம். இதன் தடிமன் குறைவாக இருந்தாலும், வேறு வசதிகளைத் தருவதில் இது சோடை போகவில்லை. இதன் திரை 5 அங்குல அகலத்தில் உள்ளது.

ஆண்ட்ராய்ட் அடிப்படையிலான அமிகோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் ஆக்டா கோர் ப்ராசசர் 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. கேமரா 13 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது.

Webdunia|
உலகிலேயே மிக மிகக் மெல்லிய தடிமனுடன் வடிவமைக்கப்பட்ட மொபைல் போன், இம்மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது.
முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. 2300 mAh திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. 3ஜி மற்றும் 4ஜி அலைவரிசைகளுக்கென தனித்தனி மாடல் போன்கள் வெளியாகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :