உலகத்தை காட்டும் கூகுளின் மாயக்கண்ணாடி

கூகுள் கண்ணாடி
FILE

கூகுள் கண்ணாடி மூலம் நாம் இருக்கும் இடம், என்ன என்பதை அறியமுடியும்.

நண்பர்களுடன் காணொளி மூலம் அரட்டை அடிக்க முடியும், செய்திகளை பகிர முடியும்.

பார்க்கும் காட்சிகளை படம் பிடிக்கலாம்.

கூடுதலாக உங்கள் குரலாலேயே கட்டுப்படுத்தக்கூடிய அளவில் தொழில்நுட்பம் இருப்பதால், இணையதளங்களையும் பார்க்க முடியும்.

இது நாம் அணிய கூடிய கண்ணாடி போன்று தான் இருக்கும்.

கண்ணாடியின் வலது புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிறு திரையில் காட்சிகள் தெரியும்.

இதனை கட்டுப்படுத்த சிறு ஒலிவாங்கியும் (மைக்ரோஃபோன்)பொருத்தப்பட்டிருக்கும்.
கூகுள் கண்ணாடி
FILE

கூகுள் கண்ணாடி சந்தைக்கு இன்னும் வரவில்லை என்றாலும், கூகுள் நிறுவன ஊழியர்கள் மூலம் இந்த திட்டம் குறித்து சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News Summary:
Webdunia|
இணையம் என்றாலே கூகுள் தான் என எல்லோரும் சொல்லும் அளவுக்கு உலகளாவிய புகழ்பெற்ற தேடுபொறி நிறுவனம், தற்போது, தனது 'கூகுள் கண்ணாடி திட்டம்' குறித்த தகவலகளை வெளியிட்டுள்ளது.
தேடுபொறி மட்டுமல்லாது, மின்னஞ்சல், கூகுள் வரைபடம், மொழிபெயர்ப்பு, காணொளி தொகுப்பு கொண்ட யூடியூப், ஆர்குட் சமூக தளம், வலைப்பூ எனப்படும் ப்ளாகுகள், ஆவண காப்பகம், என தனது சேவைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது கூகுள்.இதன் தொடர்ச்சியாக, கூகுள் கண்ணாடி என்ற திட்டத்தை உருவாக்கி வருகிறது.இந்த கூகுள் கண்ணாடியில் அப்படி என்ன சிறப்பம்சம் இருக்கிறது என்ற உங்களது கேள்விக்கு பதில் இதோ....
Google has announced test of its "Project Glass", a pair of augmented reality glasses that provides users real-time information right in front of their eyes.


இதில் மேலும் படிக்கவும் :