இளைய இணைய ஆர்வலர்களை இழந்துவரும் ஃபேஸ்புக்

Webdunia|
FILE
சமூக இணைய வலைதளமான ஃபேஸ்புக், கடந்த சில வருடங்களில் உலகளவில் ஏராளமான ஆதரவாளர்களை பெற்று அசுர வளர்ச்சியை அடைந்தது. அந்த நிலை தலைகீழாக மாறி ஃபேஸ்புக் தனது இளைய தலைமுறை இணைய ஆர்வலர்களை இழந்து வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

வாஷிங்டனில் உள்ள வர்ஜ் எனும் ஆய்வு நிறுவனம் ஒன்று ஃபேஸ்புக் தனது இளைய தலைமுறை ஆதரவாளர்களை டம்ளர், ஸ்னேப் சேட், இன்ஸ்டாகிராம் போன்ற பிற சமூக தளங்களிடம் இழந்து வருவதாக தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் மூலம் காலையில் சாப்பிட்டது முதல் அப்பா திட்டியது, பரிட்சையில் தோல்வியுற்றது என அனைத்தையும் அதன் ரசிகர்கள் பகிர்ந்துவந்தனர். இதன் நடுவே சில அப்ளிகேஷன்கள், சேட்டிங், உலகளாவிய நண்பர் பட்டாளம் என பல அம்சங்களை ஃபேஸ்புக் வாரி வழங்கியது.
எனினும் ஃபேஸ்புக்கின் செயல்பாடுகள் அதன் பயனீட்டாளர்களுக்கு சலிப்பு தட்டிவிட்டது. ஆய்வின் படி டம்ளர் ஏற்கனவே ஃபேஸ்புக் ஆதரவாளர்களை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக 13-25 வயதிலான ஆதரவாளர்களை ஃபேஸ்புக் இழந்து விட்டது.

சில வருடங்களுக்கு முன் இணையத்தில் பிறந்த நாள், பிடித்த உணவு, புகைப்படங்களை வெளியிடுவது ஃபேஷனாக இருந்து, ஆனால் இப்போது எல்லாவற்றையும் மறைத்து காப்பதே ட்ரெண்ட் என வர்ஜ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ட்ரெண்டை நோக்குவதில் ஃபேஸ்புக் பின்தங்கிவிட்டதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :