இன்டெர்நெட்டை முடக்க சதித்திட்டம்

Webdunia|
உலகம் முழுவதும் இணைய சேவையை இன்று நாள் முழுக்க முடக்க இருப்பதாக இண்டர்போல் எச்சரித்துள்ளது. இதனால், இணையதளங்களை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது.

மத்திய புலனாய்வுத் துறை இயக்குநராகப் பணியாற்றிய டி.பி. கோலியின் 13வது நினைவு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக இண்டர்போல் அமைப்பின் தலைவர் ரோனால்டு நோபல் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, இணையதளங்களில் "அனானிமஸ்' என்ற பெயருடன் வால் ஸ்டிரீட் உள்ளிட்டவைகளுக்கு எதிராக தாக்குதலை நடத்த சைபர் குற்றவாளிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அதற்காக மார்ச் 31-ந்தேதி உலகம் முழுவதும் இணையத்தை முழுவதுமாக நிறுத்தும் திட்டத்தை தீட்டியுள்ளனர் என்றார்.

இந்த தகவலால், உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் இணையதளம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் இந்த சதித்திட்டத்தை முறியடிக்க அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி சர்வதேச அளவில் புலனாய்வு நடைபெற்று வருகிறது.
News Summary:
Interpol Chief Ronald Noble warned that a group of hackers might try to shut down internet service today.
Operation Global Blackout 2012 looks to shut down the internet for a whole day by disabling its core DNS servers, making websites inaccessible," said Ronald Noble.


இதில் மேலும் படிக்கவும் :