இந்திய மொழிகளில் அடோப்

Webdunia|
தொழில்நுட்பத்தில் பிரபலமான அடோப் நிறுவனம் இந்திய மொழிகளில் இயங்கக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள தனது கிரியேட்டிவ் சூட் மென்பொருளின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

கிராபிக் டிசைன், வீடியோ எடிட்டிங், மற்றும், இணையதள பயன்பாட்டு கருவிகளான போட்டோஷாப், இன்டிசைன், இலியூஸ்டிரேட்டர், அக்ரோபட் ஆகிய மென்பொருட்களின் தொகுப்பு தான் அடோபின் கிரியேட்டிவ் சூட்.

இதன் 6 ஆம் பதிப்பு 4 வெவ்வேறு தொகுப்புகளாக விற்பனைக்கு உள்ளது.

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு தெரிவித்த அடோப் சிஸ்டம்ஸின் தெற்காசிய நிர்வாக இயக்குனர் உமங் பேடி, இந்திய மொழிகளில் தங்கள் தயாரிப்புகளை வழங்க திட்டமிட்டிருக்கிறோம்; இன் டிசைன் மென்பொருளில் 10 இந்திய மொழிகள் ஆதரிப்பதாக தெரிவித்தார்.
News Summary:
Technology giant Adobe today launched the latest version of its Creative Suite of products with enhanced functionalities and support for 10 Indian languages in its InDesign software in the country.


இதில் மேலும் படிக்கவும் :