இந்தியாவில் விற்பனைக்கு வந்தது நோக்கியா 301

Webdunia|
FILE
உலக மொபைல் கருத்தரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாடல் மொபைல் போன், அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

Flipkart விற்பனை தளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குலத்தில், 320 X 240 பிக்ஸெல்களில் டிஸ்பிளே காட்டுகிறது. இதன் சிறப்பான அம்சம் இதில் உள்ள பனோரமிக் தொடர் படங்கள் எடுக்கும் 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா ஆகும்.

நொடிக்கு 3 முதல் 5 பிரேம்களில் இதனால் படங்களை எடுக்க முடியும். இதில் இரண்டு சிம் இயக்கம் கிடைக்கிறது. நோக்கியாவின் சிரீஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 64 எம்.பி. ராம் மெமரி, 256 எம்பி இன்டெனல் மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை மெமரி விரிவுபடுத்தும் வசதி ஆகியவை மற்ற சிறப்புகளாகும். இதன் பேட்டரி 1,200 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ.5,149.


இதில் மேலும் படிக்கவும் :