இந்தியாவில் பிளாக்பெர்ரி Q5 முன்பதிவு தொடங்கியது

Webdunia|
FILE
இந்தியாவில் பிளாக்பெர்ரி Q5 முன்பதிவு தொடங்கியுள்ளது. கடந்த மே 1 ஆம் தேதி நடைபெற்ற பிளாக்பெர்ரி மாநாட்டில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிளாக்பெர்ரி Q5-இல் 2GB ராம் உடன் டூயல் கோர் 1.2 GHz இயங்குதளம் மூலம் இயக்கப்படுகிறது. உட்புற சேமிப்பு 8GB. மேலும் MicroSD card வழியாக 32 ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். 5 மெகாபிக்சல் பின்பகுதி கேமராவையும், 2 மெகாபிக்சல் முன்பகுதி கேமராவையும் கொண்டுள்ளது. இதில் 2.180 mAh பேட்டரி உள்ளது. கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய நான்கு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,000 முதல் ரூ.30,000 இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் பிளாக்பெர்ரியின் Z10 மற்றும் Q10 ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் உள்ளது. பிளாக்பெர்ரி நிறுவனம் சமீபத்தில் பிளாக்பெர்ரி Z10 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு ஒரு மாற்று திட்டத்தைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் ரூ.11,000 வரை தள்ளுபடி பெற முடியும்.
FILE

மேலும் கூடுதலாக பிளாக்பெர்ரி நிறுவனம் Z10 ஸ்மார்ட்போன் மற்றும் பிளாக்பெர்ரி கர்வ் 9220 ஆகியவற்றின் விற்பனைக்காக நுழைவு சலுகைகள் மற்றும் புதிய EMI திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :