இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 3 விரைவில்...

Webdunia|
சாம்சங்கின் கேலக்ஸி எஸ் 3 ஸ்மார்ட் போன் 2 நாட்களுக்கு முன் லண்டனில் அறிமுகமானது. ஒரு சில வாரங்களில் இந்தியாவில் இந்த போன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் போன் வரிசையில் முன்னணியில் இருக்கும் சாம்சங்கின் புதிய வரவான கேலக்ஸி எஸ் 3, அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

இந்த போன் 4.8 இன்ச் சூப்பர் AMOLED தொடுதிரை கொண்டுள்ளது.

கேலக்ஸி எஸ் 3, ஐஸ் கிரீம் சாண்ட்விச் ஆண்டிராய்ட் இயங்குதளம் மூலம் இயங்கக்கூடியது.
8 எம்பி கேமரா, 1 ஜிபி ரேம், என சிறப்பம்சங்கள் கொண்டுள்ள கேலக்ஸி எஸ் 3-ல் குரல் கட்டுப்பாடும் உண்டு.

சாம்சங்கின் முந்தைய வெளியீடான கெலக்ஸி S2 மற்றும் கேலக்ஸி நோட் ஆகியவை சந்தையில் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்றதுடன் விற்பனையிலும் சாதனை படைத்தது. இதனால், நோக்கியாவின் சாம்ராஜ்ஜியத்தை சாம்சங் உடைத்தெறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கேலக்ஸி எஸ்3 போன் இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிரது.

News Summary:
Samsung on Thursday unveiled Galaxy S3, its next-generation Android smartphone, at an event in London. It is expected to become available in India in the coming weeks.


இதில் மேலும் படிக்கவும் :