இணையத்தில் உங்கள் உலகத்தை உருவாக்குங்கள்

Webdunia|
உலகளாவிய இணைய வலைத் தொடர்பில் உங்களுக்கென்று தனித்த உலகத்தை உருவாக்கிக் கொள்ள வெப்துனியா ஓர் நல்வாய்ப்பை உருவாக்கி அளித்துள்ளது.

மை வெப்துனியா என்று அழைக்கப்படும் இந்த சேவையை பயன்படுத்தி நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் எமது இணைய பல்கலைத் தளத்தைப் போலவே உங்களுக்கென்று ஒரு பல்கலைத் தளத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

வெப்துனியா மின்னஞ்சலில் உங்களுக்கென்று ஒரு பயனாளர் கணக்கைத் (User Account) துவக்கி பிறகு மை வெப்துனியாவில் லாகின் செய்து உங்களின் பல்கலைத்தளத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இது வலைத் தளங்களில் உருவாக்கப்படும் ப்ளாக்சைப் போன்றதன்று. மாறாக, உங்களுடைய புகைப்படத்துடன் நீங்கள் விரும்பும் தலைப்புகளில் பல்வேறு சேனல்களை உருவாக்கிக் கொள்ளலாம். அதில் எதனை முன்னால் கொண்டு வருவது, படங்களை இணைப்பது ஆகிய அனைத்தும் உங்களுடைய நிர்வாக கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.

நீங்கள் உங்களுடைய கருத்துக்களையும், அறிவார்ந்த தத்துவங்களை, உலகத்தோடு நீங்கள் பகிர்ந்து கொள்ள நினைக்கும் பிரச்சனைகளை, நகைச்சுவைகளை, நீங்கள் ஓவியராக இருந்தால் உங்களுடைய படைப்புகளை, நீங்கள் எழுத்தாளராக இருந்தால் நீங்கள் எழுதிய கதைகளை அல்லது நீங்கள் விரும்பினால் நீங்கள் விவாதிக்க நினைக்கும் பொருளை..... என்று எல்லாவற்றையும் இந்த உங்கள் உலகில் கொண்டு வரலாம்.
வெப்துனியாவின் வாசகர்கள், இணைய தொழில்நுட்பத்தின் உன்னத வசதிகள் அனைத்தையும் பெற வேண்டும் என்கின்ற குறிக்கோளுடன் மிக வசதியான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை என்ன வரையரையோடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதனையும் அளித்துள்ளோம். நன்கு படித்துணர்ந்து உருவாக்குங்கள் உங்கள் உலகத்தை. இணையத்தில் உங்கள் கருத்துப் பதிவுகளை ஏற்றுங்கள். உங்களுக்கென்று ஒரு உலகம் எப்போதும் உலவட்டும்.
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌மமுக‌ப்பு‌பப‌க்க‌த்‌திலேயே ‌சிற‌ப்புக‌ளஎ‌ன்தலை‌ப்‌பி‌ன் ‌கீ‌ழஎ‌ன் வெ‌ப்து‌னியா எ‌ன்இணை‌ப்பை‌ நாடி உ‌ள்ளசெ‌ல்லு‌ங்க‌ள்.


இதில் மேலும் படிக்கவும் :