ஆப்பிள் ஐடியூன் ரேடியோ வெளியாகிறது

Webdunia|
FILE
புதுமையான மின்னணு சாதனங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக உள்ள ஆப்பிள் நிறுவனம், அடுத்தபடியாக புதிய ரேடியோ சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

i tunes radio service என்ற பெயரில், இணைய தளத்தின் மூலம் இலவசமாக இசை ஒலிபரப்பு சேவையை ஆப்பிள் தொடங்கியுள்ளது. எனினும் இதில் விளம்பரங்கள் இடம் பெறும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

பல்வேறு விதமான இசை ரசிப்பவர்களுக்கானது இந்த சேவை என ஆப்பிள் கூறியுள்ளது. வாரந்தோறும் புதிதாக வெளியாகும் ஆயிரக்கணக்கான இசை ஆல்பங்களை புத்தம் புதிதாக தாங்கள் வழங்கப் போவதாகவும் ஆப்பிள் கூறியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :