ஆண்ட்ராய்ட் மொபைல் சந்தையில் நோக்கியா

FILE

நவீன யுகத்தில் நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சாதாரண போன் விற்பனையில் நோக்கியா முதலிடத்தை வகித்து வந்தாலும், ஸ்மார்ட் போன்களில் அதன் விற்பனை மந்தமாக உள்ளது. ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்ட் மொபைல்களின் விற்பனை அதிகரித்து வருவதுதான் காரணம்.

இந்நிலையில் ஆண்ட்ராய்ட் துறையில் நுழைய இருப்பதாக கடந்த நவம்பரில் நோக்கியா அறிவித்திருந்தது. வரும் 24 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ள உலக மொபைல் மாநாட்டில் நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்ட் மொபைல் வெளியிடப்படவுள்ளது. நோக்கியாவின் ஆண்ட்ராய்ட் மொபைல்கள் குறைந்த விலைகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் வலைத்தளத்தில் புதிய ஆண்ட்ராய்ட் மொபைலின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை:-

- 4 இன்ச் டிஸ்ப்ளே
- 512 எம்.பி. உள் மெமரி, 4 ஜி.பி. மெமரி கார்ட் பொருத்திக்கொள்ளலாம்.
- 5 மெகாபிக்ஸல் கேமிரா
- ஒன்று / இரட்டை சிம் போன்கள்
- ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட்
- கூகுளின் சமீபத்திய ஆபரேட்டிங் சிஸ்டம்
Webdunia|
நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்ட் மொபைல் விரைவில் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- கூகுள் ப்ளே ஸ்டோர்


இதில் மேலும் படிக்கவும் :