ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் ஜாக்கிரதை

Webdunia|
FILE
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தங்கள் மொபைல் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் பயன்படுத்துவோர், அதிக ஜாக்கிரதையுடன் இயங்க வேண்டும் என Computer Emergency Response TeamIndia (CeRTIn) கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய வெளியில், இந்த வைரஸ் மிகவும் செயல் துடிப்போடு காணப்படுகிறது. இது ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.2.2 (ஜெல்லிபீன்) முந்தையை ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்களைப் பாதிக்கிறது. இந்த வைரஸ், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது. இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் காணப்படும் சரியற்ற குறியீட்டு வழுவே ஆகும்.
இதனைப் பயன்படுத்தியே இந்த வைரஸ் பரவுகிறது. இவை இந்த சாதனங்களில் பல அப்ளிகேஷன்களில் கெடுதல் விளைவிக்கும் குறியீடுகளைப் புகுத்துகின்றன. இதனால் அந்த அப்ளிகேஷன்களின் ஒரிஜினல் குறியீடுகள் பாதிக்கப்படுவதில்லை.

பயனாளர், தான் பயன்படுத்துவது ஒரிஜினல் அப்ளிகேஷன் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயன்படுத்துகையில் கெடுதல் ஏற்படுத்தும் குறியீடுகளின் அடிப்படையில் தகவல்கள் திருடப்படுகின்றன. இமெயில் முகவரிகள், மொபைல் போனின் தனி அடையாள எண்கள், அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் ஆகியன திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :