ஆகாஷ்-2 அடுத்த மாதம் அறிமுகம்

aakash tablet
Webdunia|
FILE
மத்திய அரசின் குறைந்த விலை தயாரிப்பான ஆகாஷ் கையடக்க கணினி அடுத்த மாதம் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

ஏழை மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில், ஆகாஷ் கையடக்க கணினியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் கபில் சிபல், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பல்வேறு வகைகளில் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் கையடக்க கணினியின் இரண்டாம் பதிப்பு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த கணினிக்காக மத்திய அரசு, உலகம் முழுவதிலும் உள்ள கணினி தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

News Summary:

A faster and enhanced version of low-cost tablet PC, Aakash, would be launched next month, Telecom Minister Kapil Sibal said


இதில் மேலும் படிக்கவும் :