அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் விலையில் ஆப்பிள் ஐபோன்

Webdunia|
FILE
இந்தியாவில் தற்போது அனைத்து தரப்பு மக்களும் பெரும்பான்மையாக உபயோகிப்பது நோக்கியா, சாம்சங், மற்றும் சீன ரக மொபைல் போன்கள்தான். தற்போது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம், தன் வியாபாரத்தை விரிவுபடுத்த விலை குறைந்த ஐபோன்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் ஐபோன்கள் அதிக விலை கொண்டவையாக உள்ளதால் நடுத்தர மக்களிடையே ஐபோன்களை வாங்கும் ஆர்வம் மிகவும் குறைவாகவே உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு ஆப்பிள் நிறுவனம், குறைந்த விலை ஐபோன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை சீன ரக மொபைல் போன்களின் விலை அளவுக்கே இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் இந்தியாவில் ஐபோன்களின் பயன்பாடு அதிகரிக்கக்கூடும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :