ஃபேஸ்புக்கை விட இமெயில் தான் இந்தியாவில் பிரபலம்

இணையதளம்
webdunia photo
FILE

வாய்ஸ் ஓவர் ஐபி(VOIP) எனப்படும் இணைய வழி குரல் பரிமாற்றம் மூலம் தொடர்புக்கொள்வது வெறும் 25 விழுக்காடு தான் என்று ஆய்வு கூறுகிறது.

செல்பேசி வழி இணைய வசதி மின்னஞ்சல், சமூக தளங்கள் உள்ளிட்ட இணைய தொடர்பு கருவிகளை பயன்படுத்துவதை அதிகரித்துள்ளதாக பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ப்ஸாஸின் இன்னொரு ஆய்வு படி, 4 கோடி இந்தியர்கள் செல்பேசி வழி இணையம் பயன்படுத்துவதாகவும், அதில் 56 விழுகாட்டினர் ஒருநாளைக்கு அதிகம் முறை இணையம் பயன்படுத்துகின்றனர்.

40 விழுகாட்டினர் குறைந்தது ஒருமுறையாவது ஒரு நாளைக்கு இணையம் பயன்படுத்துவதாகவும், வெறும் 6 விழுகாட்டினரே தங்கள் செல்பேசியில் இணையம் பயன்படுத்தவில்லை என்று ஆய்வில் தெரிகிறது.

அதேசமயம், இந்தோனிசியாவில் 83 விழுக்காடு பேர் சமூக ஊடகங்களுக்காக இணையம் பயன்படுத்துகின்றனர்.

இதேப்போல், அர்ஜெண்டினாவில் 76 விழுக்காடும், ரஷ்யாவில் 75 விழுக்காடும், தென் ஆப்ரிக்காவில் 73 விழுக்காடும், ஸ்வீடனில் 72 விழுக்காடும், ஸ்பெயினில் 71 விழுக்காடும், ஹங்கேரியில் 70 விழுக்காடு பேர் சமூக ஊடகங்களுக்காக இணையம் பயன்படுத்துகின்றனர்.

ஃபேஸ்புக், மற்றும் மற்ற சமூக ஊடக தளங்களான ப்ளாக், இணைய குழு (ஃபோரம்) உள்ளிட்டவை உருவாக்கப்பட்ட அமெரிக்காவிலேயே 10 ல் 6 பேர் மட்டுமே பயன்படுத்துவதாகவும், உலகளவில் 24 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மிகக்குறைவாக ஜப்பானில் 35 விழுக்காட்டினரே சமூக தளங்களை பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது.
இணையதளம்
webdunia photo
FILE

இதேப்போன்று ஆண்டி வைரஸ் நிறுவனமான நார்டன் நடத்திய ஆய்வில் இந்தியர்கள் மின்னஞ்சலை விட சமூக தளங்களில் அதிக நேரம் செலவிடுவதாக கூறுகிறது. அதாவது, வாரத்திற்கு 9.7 மணி நேரம் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக தளஙக்ளில் அரட்டை அடிக்க (சாட்) இந்தியர்கள் செலவிடுவதகாவும், மின்னஞ்சலுக்காக 6.1 மணி நேரமே செலவிடுவதாக கூறுகிறது.

பொதுவாக இந்தியர்கள் வாரத்திற்கு 58 மணிநேரம் இணையத்தில் செலவிடுகின்றனர்.

பெரும்பாலும் 92 விழுகாட்டினர் மின்னஞ்சல் பார்க்கவே இணையத்தை பயன்படுத்துவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

நார்ட்டன் வெளியிட்ட இந்த தகவலில், நல்ல செய்தி என்ன்வென்றால் இந்தியர்கள் இணைய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அதுகுறித்த புரிதல், அறிதல் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வதில் இந்தியர்கள் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்றே அறிவுறுத்துகிறது.

மேலும், கணினி, செல்பேசி, உள்ளிட்ட பல்வேறு கருவிகளில் பயன்படுத்தப்படும் தங்களின் தகவல், சுய விபரம் குறித்த பாதுகாப்பில் இந்தியர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று நார்ட்டன் அறிவுறுத்துகிறது.

News Summary:
Facebook, Twitter might be flavour of the season, but email remains more popular than social media as a method of internet communication for Indians, says a survey.
Webdunia|
இணைய தொடர்புகளில் ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்களை விட மின்னஞ்சலே இந்தியாவில் அதிகம் பிரபலமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், இணைய பயன்பாட்டில் அதிகம் நேரம் சமூக தளங்களிலேயே பொழுதை கழிப்பதாக ஆய்வு கூறுகிறது.
பன்னாட்டு ஆய்வு நிறுவனமான இப்ஸாஸ் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது.அதாவது, உலகளவில் உள்ள இணையதள பயனர்கள் குறித்தும், அவர்கள் எத்தகைய தளங்களில் அதிகம் செலவிடுகிறார்கள் என்பது குறித்தும், இப்ஸாஸ் நிறுவனம் கணக்கெடுத்தது.ஆய்வின் முடிவு படி, இந்தியாவில் இணைய தொடர்புகளில் உள்ளவர்கள் தங்கள் தகவலை பரிமாறி கொள்ள ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக தளங்களை விட மின்னஞ்சலையே அதிகம் பயன்படுத்துவதாக தெரிகிறது.அதாவது, இணைய பயனர்களில் 68 விழுக்காட்டினர் மின்னஞ்சலுக்காக இணையத்தை பயன்படுத்துவதாகவும், 60 விழுகாட்டினர் சமூக இணையதளங்கள் மூலம் தொடர்புக்கொள்வதாகவும் ஆய்வு கூறுகிறது.இதுக்குறித்து, இப்ஸாஸ் நிறுவன விற்பனை மற்றும் தொடர்பு துறை தலைவர் பிஸ்வருப் பானர்ஜி தெரிவிக்கும் போது, இந்தியாவில் அண்மை காலமாக இணையம் அதிகளவில் பரவியுள்ளதாக கூறினார்.
Indians spend more time on social networking sites than on checking e-mails, a survey by an online software security company has found


இதில் மேலும் படிக்கவும் :