திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. அரபுகள் தங்களின் மொழியையும், எழுத்தையும் அறிந்திருந்தார்கள். எனவே, உஸ்மான்(ரலி) அவர்கள் திருக்குர்ஆன் பிரதிகளை வெளியிட்டபோது, திருக்குர்ஆனின் எழுத்துகளுக்கு மேலும், கீழும் புள்ளி (நுக்தாக்)கள் வைக்கப்படவில்லை.