ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று: கொல்கத்தாவுக்கு எளிய இலக்கை கொடுத்த பெங்களூரு!

Bangalore
ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று: கொல்கத்தாவுக்கு எளிய இலக்கை கொடுத்த பெங்களூரு!
Mahendran| Last Modified திங்கள், 11 அக்டோபர் 2021 (21:15 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று எலிமினேட்டர் சுற்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் வெற்றி பெறும் அணி நாளை டெல்லி அணியுடன் மோதும் என்றும் அந்த போட்டியில் வெல்லும் அணியை சென்னையுடன் இறுதிப் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விராத் கோலி மிகவும் பொறுப்புடன் விளையாடி 39 ரன்கள் அடித்தார்
இந்தநிலையில் 139
என்ற எளிய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பதும் இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
இதில் மேலும் படிக்கவும் :