வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:28 IST)

ஏலத்துக்கு முன்னர் தோனியை சிஎஸ்கே விடுவிக்க வேண்டும் – ஆகாஷ் சோப்ரா சொல்லும் யோசனை!

சிஎஸ்கே அணி அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஏலத்துக்கு முன்னர் தோனியை விடுவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ப்ளே ஆஃப் தகுதியை இழந்த முதல் அணியாக சிஎஸ்கே மாறியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தோல்விக்கு கேப்டன் தோனியின் போதாமையே காரணம் என சமூக வலைதளங்களில் பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு அணி கேப்டன் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதது இதுவே முதல்முறை. இந்நிலையில் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்குக் கேப்டனாக இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ‘சிஎஸ்கே அணி அடுத்த் ஆண்டு நடக்கும் ஏலத்துக்கு முன்னர் தோனியை விடுவிக்க வேண்டும். ஏனன்றால் தோனியை தக்கவைத்தால் அவரை 3 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது. தோனியோடு நீங்கள் 3 ஆண்டுகள் இணைந்து செயலாற்ற முடியுமா என யோசிக்க வேண்டும். அவரை ஏலத்தில் ரைட் டு மேட்ச் கார்டில் தேர்வு செய்து கொள்ளலாம்.’ எனக் கூறியுள்ளார்.