வெஜிடபிள் ஓட்ஸ் புலாவ்

Webdunia| Last Modified ஞாயிறு, 6 ஜனவரி 2013 (17:41 IST)
மிக எளிதாக ஜீரணமாகும் ஓட்சை காய்கறிகளோடு சுவையாக சமைத்து கொடுத்தல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையானவை:

ஓட்ஸ் (வறுத்தது) - 1 கப்
பாஸ்மதி அரிசி - 1 கப்
கேரட், பீன்ஸ் (நறுக்கியது) - 1/2 கப்
பட்டாணி - சிறிது
வெங்காயம் (சிறியது) - 1
பூண்டு (அரைத்தது) - 2 ஸ்பூன்
பட்டை,சோம்பு,கிராம்பு - சிறிது முந்திரி - தேவைகேற்ப
பச்சை மிளகாய் - 4
நெய்,உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து சரியான அளவு தண்ணீரில் வடித்து எடுக்கவும்.

வாணலியில் நெய் விட்டு பட்டை, சோம்பு, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றை வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறும்போது அதோடு பச்சை மிளகாய், பூண்டு விழுது, காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் நன்கு வதங்கியதும் பாஸ்மதி அரிசியை சேர்த்து தண்ணீர் விட்டி வேகவைக்கவும்.

சாதம் வேகும்போது இறுதியாக வறுத்த ஓட்சை சேர்த்து சூடாக பரிமாறவும்.


இதில் மேலும் படிக்கவும் :