வாழைப்பூ வடை

Webdunia| Last Modified சனி, 4 டிசம்பர் 2010 (17:20 IST)
தேவையானப் பொருட்கள்:

கடலைப் பருப்பு - 400 கிராம்
வாழைப்பூ - 2
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 20
தேங்காய் துருவல் - 1 தேங்காய்
இஞ்சி - 25 கிராம்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:

கடலைப் பருப்பை தண்ணீரில் 3 மணி நேரம் ஊறப் போடவும்.

நன்கு ஊறிய பின்னர் அதை அரை குறையாக அரைத்து அதனுடன் இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய்த் துண்டுகளையும் சேர்த்துப் பிசையவும்.

அதன்பின்னர் நறுக்கி வைத்த வெங்காயம், துண்டு செய்யப்பட்ட கொத்துமல்லி, கறிவேப்பிலை மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
வாழைப்பூவை சுத்தம் செய்து அதில் உள்ள கற்களை அகற்றிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதைப் பருப்போடு சேர்த்து நன்கு பிசையவும். போதுமான அளவு உப்பு சேர்க்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து போதுமான அளவு எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்துள்ள பருப்பை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கை அளவிற்கு தட்டி எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சத்துள்ள வாழைப்பூ வடை தயார்.


இதில் மேலும் படிக்கவும் :