வாழைக்காய் பரோட்டா

Webdunia| Last Modified திங்கள், 6 டிசம்பர் 2010 (17:51 IST)
தேவையானப் பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
வாழைக்காய் - 1 பெரியது
உருளைக்கிழங்கு - 1 பெரியது
வெங்காயம் - 1
கொத்துமல்லி - அரை கப்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கொத்துமல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவில் சிறிது உப்பு சேர்த்து எண்ணெய் விட்டுப் பிசறி தேவையான தண்ணீர் விட்டுப் பிசையவும்.

45 நிமிடங்கள் ஊற விடவும்.
வாழைக்காயையும், உருளைக் கிழங்கையும் வேகவிட்டு தோலுரித்து நன்கு மசிக்கவும்.

வெங்காயத்தை அரிந்து அதனுடன் பச்சை மிளகாய், கொத்துமல்லித் தழை, இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

எண்ணெயைக் காயவைத்து அதில் அரைத்த விழுதையும், மற்றப் பொடிகளையும் நன்கு வதக்கி அத்துடன் மசித்த காய்கறிகளையும் உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும்.
மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி கையலக அளவில் சப்பாத்திகளாக இடவும்.

சப்பாத்திக்குள் ஆறிய வாழைக்காய் கிழங்கு விழுதை வைத்து ஓரங்களை ஒன்று சேர்த்து ஒட்டி, அதன் மீது மாவு தூவி சற்று கனமான பரோட்டாவாக இடவும்.

சூடான தோசைக்கல்லில் பரோட்டோவை போட்டு இருபுறமும் வேக விடவும்.
பிறகு நெய் விட்டு நன்கு பொன்னிறமாகும் வரை வாட்டி எடுக்கவும்.

அவ்வளவுதான் அப்படியேயும் சாப்பிடலாம். தேவைப்பட்டால் மாசாலா உடன் தொட்டும் சாப்பிடலாம்.


இதில் மேலும் படிக்கவும் :