முள் முருங்கை இலை வடை

Webdunia| Last Modified புதன், 15 டிசம்பர் 2010 (18:07 IST)
தேவையானவை:

முள் முருங்கை இலை - 50 கிராம்
உளுந்தம் பருப்பு - 100 கிராம்
சித்தரத்தை - ஒரு துண்டு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முள் முருங்கை இலைகளைப் பறித்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் உளுத்தம் பருப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
குறைவான உப்பு, சிறிது சித்தரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் நல்லெண்ணெயில் வடை சுடுவது போல சுட வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று வடைகளை மூன்று நாட்களுக்குச் சாப்பிட்டு வர இருமல் குறையும், சளி நீங்கும்.


இதில் மேலும் படிக்கவும் :