நெல்லிக்காய் சட்னி

Webdunia| Last Modified திங்கள், 1 நவம்பர் 2010 (12:57 IST)
தேவையானவை

நெல்லிக்காய் பெரியது - 3
தேங்காய் - 3 சில்
கடுகு - 1/2 தே‌க்கர‌ண்டி
கடலைப்பருப்பு - 1/4 தே‌க்கர‌ண்டி
மிளகாய் வற்றல் - 3
பெருங்காயம் - 1/2 தே‌க்கர‌ண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தே‌க்கர‌ண்டி
எண்ணெய் - 2 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு
செ‌ய்யு‌ம் முறை

நெல்லிக்காயை கழுவி சுத்தம் செய்து கொட்டையை நீக்கி விடவேண்டும்.

மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைப் பொன் நிறமாக வறுத்து அதில் நெல்லிக்காய்த் துண்டுகள், தேங்காய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
நெல்லிக்காய் சட்னி தயார்.


இதில் மேலும் படிக்கவும் :