ட்ரை ப்ரூட்ஸ் புலாவ்

Webdunia|
ட்ரை ப்ரூட்ஸ் புலாவ் வார இறுதி நாட்களில் குடும்பத்தோடு சுவைத்து மகிழ ஒரு சிறந்த உணவாகும்.

தேவையானவை

பாஸ்மதி அரிசி - 2 கப்
முந்திரி, பாதாம், அக்ரூட், உளர்ந்த திராட்சை - 1 சிறிய கப்
தக்காளி விழுது - 1/2 கப்
வெங்காயம் - 1
மிளகு தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
லவங்கம் - 2உப்பு, நெய் - தேவைகேற்ப

செய்முறை

முந்திரி, பாதாம், அக்ரூட், உலர்ந்த திராட்சை ஆகியவற்றை பொடியாக நறுக்கி சிறிதளவு நெய்யில் வருதேடுத்து தனியே வைத்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதனோடு லவங்கம், நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது, மிளகு தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் இதனோடு பாஸ்மதி அரிசி, வறுத்த ட்ரை ப்ரூட்ஸ், மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சமைத்தால் ட்ரை ப்ரூட்ஸ் புலாவ் ரெடி.


இதில் மேலும் படிக்கவும் :